தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேலாக திறந்திருந்த பட்டாசு கடையை மூடச்சொல்லி கடை ஊழியர்களை காவலர் ஆபாசமாக பேசிய வீடியோ வெளியாகி உள்ளது. குரும்பூர் பஜார் பகுதியில் பாக்யராஜ் என்பவரின் பட்டாசு கடையில் ஊழியர்கள் கடையை மூடிவிட்டு உள்ளே அமர்ந்து உணவு அருந்திக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த குரும்பூர் காவல் நிலைய காவலர் கடையின் விளக்கை அணைக்கச்சொல்லி ஊழியர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டினார். இது அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது.இதையும் படியுங்கள் : கந்த சஷ்டி திருவிழா நாளை தொடங்க உள்ள நிலையில் யாகசாலை மண்டபம்