கோவை நல்லாம்பாளையம் பகுதியில் செல்போன் பார்த்த படி சாலையை கடந்த இளைஞரை அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் கன்னத்தில் அறைந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சின்ன வேடப்பட்டி பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் பொருட்களை வாங்க நல்லாம்பாளையம் பகுதிக்கு சென்றார். அப்போது செல்போன் பார்த்த படி சாலையை மோகன்ராஜ் கடந்த போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த காவலர், மோகன்ராஜை திடீரென கன்னத்தில் அறைந்தார்.