திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலை ஒட்டிய 14 கிலோமீட்டர் கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கு இடையூறாக சாலைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை போலீசார் அகற்றினர். மேலும் இனி வரும் காலங்களிலும் பக்தர்களுக்கு இடையூறாக சாலைகளை ஆக்கிரமித்து கடை அமைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர்.