விழுப்புரத்தில் தவெகவினர் வைத்திருந்த பட்டாசுகளை போலீசார் அள்ளிச் சென்றனர். சர்வதேச மகளிர் தினத்தையொட்டி விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் நடந்த விழாவில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக அவரை வரவேற்பதற்காக விழுப்புரம் காந்தி சிலை அருகே ஒன்று திரண்டிருந்த தவெகவினர் பட்டாசுடன் காத்திருந்த போது அங்கு வந்த போலீசார் பொது மக்களுக்கு இடையூறாக பட்டாசுகளை வெடிக்க முயன்றதாக கூறி பட்டாசுகளை அள்ளிச் சென்றனர்.