காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே மதுபோதையில் பைக் ஓட்டி சென்றதாக கூறி, போக்குவரத்து போலீசார் பைக் மற்றும் செல்போனை பறிமுதல் செய்ததால் மனமுடைந்து தற்கொலை செய்த நபரின் சடலத்தை மீட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொளத்தூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் மதுபோதையில், வாலாஜாபாத்தில் உள்ள நண்பர் வீட்டிற்கு பைக்கில் சென்றதாக கூறப்படுகிறது.