சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கொள்ளையடிக்கப்பட்ட கோவில் நகையை இரண்டே நாளில் காவல்துறையினர் மீட்டனர். சேதுராமன் என்பவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த கோவிலுக்கு சொந்தமான 103 பவுன் தங்க நகை, 4 கிலோ வெள்ளி மற்றும் 50 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது. இதுகுறித்து புகார் அளிக்கப்பட்ட இரண்டே நாளில், சோமசுந்தரம், சுரேஷ் ஆகியோரை பள்ளத்தூர் காவல்துறையினர் கைது செய்தனர்.