கோவை மாவட்டம் பெரிய கடைவீதியில் பொதுமக்களிடம் அத்துமீறியதாக கூறி போலீசார் விசாரித்ததால் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டவுன்ஹால், பெரிய கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் நடந்து செல்வோரை ஊழியர்கள் கடைக்குள் இழுத்து சென்று வலுக்கட்டாயமாக பொருட்களை வாங்க சொல்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, அவர்களை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்த போலீசாரை கண்டித்து வியாபாரிகள் சங்கத்தினர் மழையில் நனைந்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.