திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சொந்த மகனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய தாய், சகோதரி உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். உடுமலை அருகேயுள்ள ஆலாமரத்தூரை சேர்ந்த சிவக்குமார், அவரது தாய் பொன்னுதாயுடன் வசித்து வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் இரவு தோட்டத்தில் மது அருந்தி கொண்டிருந்தவர் திடீரென மாயமானார். இது குறித்து சிவக்குமாரின் சகோதரி திலகவதி அளித்த புகாரில் குடிமங்கலம் போலீசார், கிணற்றிலிருந்து சிவக்குமாரின் சடலத்தை மீட்டனர். விசாரணையில் சிவக்குமார் தினமும் மது அருந்திவிட்டு தகாத வார்த்தைகளில் பேசியதால் திலகவதி தனது தாய், கணவர் மற்றும் அவரது நண்பர்கள் உதவியுடன் சிவக்குமாரை கொலை செய்து கிணற்றில் வீசியது தெரியவந்தது.