கடலூரில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற தம்பதிக்கு போலீசார் அபராதம் விதித்த நிலையில், மாவட்ட ஆட்சியர் புதிய ஹெல்மட்டை வழங்கினார். 36 ஆவது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை ஒட்டி கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமானோர் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பதாகைகள் ஏந்திச் சென்றனர். இதனையடுத்து சாலை பாதுகாப்பு விதிமுறைகள் கொண்ட கண்காட்சியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அப்பகுதியில் ஹெல்மெட் அணியாமல் வந்த தம்பதிக்கு புதிய ஹெல்மட்டை வழங்கி பாதுகாப்பான பயணத்திற்கு ஹெல்மட்டை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.