கரூர் மாவட்டம் பாதையூர் கிராமத்தில் கபடி வீரர்களை, போலீசார் லத்தியை வைத்து விரட்டி அடித்ததால் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாதையூர் இளைஞர்கள் சார்பில், காவல்துறையில் உரிய அனுமதி பெறப்பட்டு 2 நாட்கள் கபடி போட்டி நடைபெற்றது. அதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன. அவர்களை ஊர் மக்கள் சமுதாயக் கூடத்தில் தங்க வைத்தனர். இதனிடையே, போட்டி நடத்தக் கூடாது எனக்கூறி, பசுபதிபாளையம் காவல்துறையினர் லத்தியை வைத்து மிரட்டி விரட்டி அடித்தனர். 13-வது வார்டு கவுன்சிலர் சரண்யா, மற்றும் அவரது கணவர் போலீசாரை தூண்டி விட்டதாக மக்கள் குற்றம்சாட்டும் நிலையில், சமுதாய கூடத்தின் பூட்டை உடைத்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.