திருச்சி மாவட்டம் பச்சை மலை டாப் செங்காட்டுப்பட்டி மலை கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், செவிலியர்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் நீண்ட நேரம் காத்திருந்து மருத்துவரை பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கர்ப்பிணி பெண்கள் தங்கும் பகுதி அருகே சுற்றுச்சுவர் இல்லாததால், வனப் பகுதியிலிருந்து பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் மருத்துவமனை வளாகத்துக்குள் நுழையும் அபாயம் எழுந்துள்ளது. மழைக் காலங்களில் மருத்துவமனை வளாகம் முழுவதும் சதுப்பு நீர் தேங்கி, உள்ளே செல்ல முடியாத நிலையும் நிலவி வருவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.