நாமக்கலில் பழைய அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சமூக விரோத செயல்கள் நடப்பதால், அதனை நகர்ப்புற மருத்துவமனையாக மாற்றி செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மோகனூர் சாலையில் செயல்பட்டு வந்த அரசு தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்ட பிறகு, பழைய மருத்துவமனையில் சித்தா, ஹோமியோ, யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவுகள் மட்டும் காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை செயல்படுகிறது. மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் அலுவலகமும் இங்கு செயல்படும் நிலையில், காலியாக உள்ள கட்டடங்களில் இரவு நேரங்களில் பாலியல் தொழில் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.