சென்னை மூலக்கொத்தளத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளில் அடிப்படை வசதிகள் எதுவும் பூர்த்தி செய்யப்படாததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.அனைத்து வசதிகளும் இருப்பதாக கூறி தங்களை அழைத்து வந்த அதிகாரிகள், குடியிருப்புகளில் அரைகுறையாக விடப்பட்ட பணிகளை தற்போதுதான் மேற்கொள்வதாக குற்றம் சாட்டினர்.