வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடு பேட்டை பகுதியில் மெயின் பைப்லைன் உடைந்து, வெளியேறும் குடிதண்ணீர், கழிவுநீர் கால்வாயிலும், சாலையிலும் செல்வதைப் பார்த்து பொதுமக்கள் வேதனைக்கு உள்ளாகினர். உடைந்த பைப் லைனை உடனடியாக சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.