திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே அடமானம் வைத்து பணம் வாங்கி தருவதாக ஏமாற்றி, காரை எடுத்து சென்று விற்ற நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண் ஒருவர் SP அலுவலகத்தில் புகார் அளித்தார். வக்கணம்பட்டியை சேர்ந்த மஞ்சு என்பவர் தனது மாற்றுத்திறனாளி மகளின் படிப்பு செலவிற்கு பணம் தேவைபட்டதால் கமலக்கண்ணன் என்பவரிடம் காரை அடமானம் வைக்க அணுகியுள்ளார்.