திருவள்ளூரில் நாய்களுக்கு உணவில் விஷம் வைத்துக் கொன்றவரை போலீசார் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனர். திருவள்ளூர் ஜெயநகர் பகுதியைச் சேர்ந்த வெற்றி வேந்தன், நள்ளிரவு விஷம் கலந்த உணவை பக்கெட்டில் எடுத்துச்சென்று அப்பகுதியில் உள்ள நாய்களுக்கு வைப்பதும், உணவை உண்ட நாய்கள் துடிதுடித்து இறக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நாய்களுக்கு விஷம் வைத்துக் கொன்ற வெற்றிவேந்தனை புதுச்சேரியில் வைத்து கைது செய்தனர்.