திருச்சி மாவட்டம், கண்ணனூரில் உரிய அனுமதியின்றி சரளை மண் அள்ளி சென்ற லாரியை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர். சரளை மண் கடத்தல் குறித்த தகவல் பெற்றதும் வருவாய்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே மண் கடத்தி வந்த நபர் டிராக்டரை நிறுத்திவிட்டு தப்பியோடினார்.