கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் பலரிடமும் பல லட்ச ரூபாய் மோசடி செய்த நபரை, பாதிக்கப்பட்டவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். சந்தைப்பேட்டையை சேர்ந்த காமராஜ், தாம் ரியல் எஸ்டேட் தொழிலில் கொடி கட்டி பறப்பதாகவும், பல கோடி மதிப்பிலான நிலங்கள், புதிய மற்றும் பழைய கார்களை குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாகவும் கூறி தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்களிடம் பல லட்ச ரூபாயை வசூலித்து மோசடி செய்ததாக கூறப்படுகிறது. திருவண்ணாமலையில் பதுங்கி இருந்தவரை பாதிக்கப்பட்டவர்கள் பிடித்து திருக்கோவிலூர் போலீசில் ஒப்படைத்தனர். திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எஸ்.ஐ அஞ்சலையின் மருமகனான காமராஜ், மோசடி செய்த பணத்தை மாமியாரிடம் கொடுத்திருப்பதாக கூறியுள்ளார்.