விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ச்சியாக இருசக்கர வாகனங்கள் திருடப்படுவதாக வந்த புகார்களை அடுத்து செஞ்சி காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் குற்றவாளியை சிசிடிவி காட்சிகளை கொண்டு தேடிவந்தனர். இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த ஷாஜகான் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 18 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்,