மதுரை வாடிப்பட்டியில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க சாப்பிடாமல் கூட காலை முதல் இரவு வரை காத்திருந்ததால் பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்தனர். "உங்களை தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின்படி, வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா பொதுமக்களிடம் காலை 11 மணிக்கு மனு வாங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இரவு 7 மணிக்கு மேல்தான் வந்தார்.