தூத்துக்குடி மாவட்டம் மழவராயநத்தம் கிராமத்தில் இறந்தவர்களை சுடுகாட்டிற்கு எடுத்து செல்ல சரியான பாதை இல்லாததால், குளத்தில் உள்ள தண்ணீர் வழியாக சடலத்தை தூக்கி செல்லும் அவலநிலை நீடிக்கிறது. யார் மரணம் அடைந்தாலும் அவர்களது உடலை மார்பளவு தண்ணீர் உள்ள குளத்தில் இறங்கி தான் எடுத்த செல்ல வேண்டி உள்ளதால், பாலம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.