மற்ற நகரங்களை விட, பட்டாசுகளை உற்பத்தி செய்யும் சிவகாசியில் மக்கள் அதிகளவில் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். நேற்று காலை முதலே காதை பிளக்கும் அளவுக்கு சத்தத்தை எழுப்பும் பட்டாசுகளை வெடித்த மக்கள், மாலை நேரத்தில் வானை பிளக்கும் வண்ணமயமான வாண வேடிக்கைகளை வெடித்து உற்சாகமடைந்தனர்.