தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் முறையான அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை எனக்கூறி பொதுமக்கள் பேரூராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் உள்ள 8 மற்றும் 9 ஆவது வார்டுகளில் குடிநீர், சாலை, கழிப்பிட வசதி செய்துதரவில்லை என கூறி பொதுமக்கள் பேரூராட்சி மன்ற தலைவர் வேல்முருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அலுவலகத்தில் வார்டு உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றபோது வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக் கூறி பேரூராட்சி அலுவலகத்திற்குள் பேரூராட்சி மன்ற தலைவரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்த பொதுமக்கள் . தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுணடன்பட்டி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. இதில் குறிப்பாக 8-வது, 9 -வது வார்டில் அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, கழிப்பிட வசதி என்ற எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை எனக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி அலுவலகத்திற்குள் இருந்த பேரூராட்சி மன்ற தலைவர் வேல்முருகனை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் நடைபெற்ற இந்த வாக்குவாதத்தில் அதிகாரிகள் வருகை தந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை செய்த பின் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். இன்று காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் வார்டு உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறும் நேரத்தில் இவ்வாறு ஒரு பிரச்சனை நடைபெற்றது அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.