சென்னை தியாகராய நகரில் உள்ள புதுக்கோட்டை அய்யா செட்டிநாடு ஓட்டலில் ஊழியரை உரிமையாளர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஓட்டலில் உணவு உண்பதற்காக வந்த வாடிக்கையாளர்கள், குறிப்பிட்ட ஊழியர் தங்களுக்கு பொரியல் வைப்பதில் தாமதம் ஏற்படுத்தியதாக புகாரளித்ததால், உரிமையாளர் ஆத்திரமடைந்து ஊழியரை கடுமையாக தாக்கினார்.