திண்டுக்கல்லில் அச்சக உரிமையாளரிடமிருந்து ஆறரை கோடி மதிப்பிலான நிலத்தை அபகரிக்க முயன்ற நபர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆர். எம். காலனியை சேர்ந்த அச்சக உரிமையாளர் சரவணனின் நிலத்தை வாங்கி கொள்வதாக கூறி, அதன் அசல் ஆவணங்களை பெற்றுக்கொண்டு தர மறுப்பதாக, திருச்சியை சேர்ந்த மின்விளக்கு உதிரிபாகம் தயாரிக்கும் நிறுவன உரிமையாளர் வினோத்குமார் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.