தஞ்சாவூரில் வரி கட்டாமல் டிமிக்கி கொடுத்து வந்த வணிக வளாக உரிமையாளரிடம், மாநகராட்சி ஊழியர்கள் வித்தியாசமான முறையில் வரி வசூலித்தனர். ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் வணிக வளாகத்துக்கான வரியை கடந்த 15 ஆண்டுகளாக உரிமையாளர் கட்டாமல் இருந்ததால், அந்த வணிக வளாக வாசலில் குப்பை கொட்டப்பட்டது. இதனையடுத்து, 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை உடனே கொடுத்தார்.