திருப்பத்தூர் மாவட்டம் பார்சம்பேட்டையில் ஒப்பந்த காலம் முடிந்து 4 ஆண்டுகளாகியும் தொடர்ந்து இயங்கி வந்த டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கூறி, உரிமையாளர் கடைக்கு பூட்டு போட்டதால் மதுபிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆறுமுகம் என்பவர் ARG சாய் என்ற பெயரில் வணிக வளாகம் கட்டி, வீடுகள் மற்றும் 11 கடைகளை வாடகைக்கு விட்டிருந்தார். கடந்த 2016ல் 3 ஆண்டு ஒப்பந்தத்தின் பேரில் ஒரு கடையை அரசு டாஸ்மாக் மதுபானக் கடைக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இதனிடையே ஆறுமுகம் இறந்துவிட, ஒப்பந்தம் முடிந்து 4 ஆண்டுகள் ஆகியும் 7,500 மாத வாடகைக்கு டாஸ்மாக் கடை தொடர்ந்து இயங்கி வந்தது. ஆறுமுகத்தின் மனைவி பாரதி, பலமுறை கடையை அகற்றக் கூறியும், மாவட்ட ஆட்சியர் வரை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், அதிரடியாக கடைக்கு பூட்டுப்போட்டார்.