விருதுநகர் அருகே சிதிலமடைந்த வீட்டில் வசித்த பெண்ணுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பட்டா மாறுதல் ஆணையை வழங்கினார். வேலாயுதபுரம் கிராமத்தை சேர்ந்த ராணி என்பவரது வீட்டுக்கு நேரில் சென்ற அமைச்சர், அப்பெண்ணுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.