கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள சுந்தரம் கிளேட்டன் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து இளைஞர் உயிரிழந்த நிலையில், அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுந்தரம் கிளேட்டன் தொழிற்சாலையில், கழிவுநீர் சுத்திகரிப்பு வாட்டர் ஆப்ரேட்டராக நவீன் என்ற இளைஞர் பணியாற்றி வந்தார். இந்நிலையில், நவீன் கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தொழிற்சாலையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர பணி வழங்குவதாக தொழிற்சாலை நிர்வாகம் தெரிவித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.