விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முகவூர் கிராமத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வனப்பேச்சி அம்மன் கோவில் திருவிழா 3 ஆண்டுகளுக்கு பின் விமரிசையாக நடைபெற்றது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள் அனைவரும் ஊரை விட்டு வெளியேறி, 4 ஆயிரம் கிலோ அரிசி, மளிகை பொருட்களுடன் சாஸ்தா கோவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள வனப்பேச்சி அம்மன் கோவிலுக்கு சென்றனர். சனிக்கிழமை இரவு அங்கேயே குடில் அமைத்து தங்கியவர்கள் விடிய விடிய வழிபாடு செய்து ஞாயிறு காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து படையலிட்டனர். பின்னர் அன்னதானம் பரிமாறப்பட்டது. இதே நேரத்தில் பெண்கள் வீட்டிலேயே வன பேச்சியை நினைத்து வழிபாடு செய்தனர்.