திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பைக் மீது கார் மோதி விபத்துக்குள்ளனாதில், பைக்கில் சென்ற கணவன்,மனைவி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பாலப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன்- சுமதி தம்பதி, பைக்கில் பாலமேட்டில் உள்ள அவர்களது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளனர். கோமணம்பட்டி பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பைக்கின் மீது மோதியது. இதில், பைக்கில் சென்ற தம்பதி சாலையில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.