தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றுக்குள் பழமையான செங்கல் கட்டுமானங்கள் உள்ளதால் அதனை முறையாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள முத்தாலங்குறிச்சி என்னும் கிராமத்திற்கு அடியில் ஆய்வு செய்தால் பழமை வாய்ந்த நகரம் கண்டுபிடிக்கப்படலாம் என கூறப்படுகிறது.