திருச்சி ஸ்ரீரங்கத்தில் தள்ளாடியபடியே நடந்து சென்ற முதியவர் ஒருவர், மிதிவண்டியை திருடிச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. வடக்கு தேவி தெருவில் தள்ளாடியபடியே சென்ற முதியவர்,சூப்பர் மார்க்கெட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மிதிவண்டியை நோட்டம்விட்டபடியே நகர்ந்தார். அப்போது, அந்த மிதிவண்டி பூட்டப்படாமல் இருந்ததைக் கண்ட அவர், சிறிது தூரம் சென்று விட்டு மீண்டும் திரும்பி வந்தார். பின்னர், சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மிதிவண்டியை திருடிக் கொண்டு வேகமாக மிதித்துச் சென்றார். இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவான நிலையில், முதியவரை போலீஸார் தேடி வருகின்றனர்.இதையும் படியுங்கள் : தனியார் கல்லூரி கட்டடத்தில் தேனீக்கள் கட்டியிருந்த தேன்கூடு... கெமிக்கல் ஸ்பிரே அடித்து தேன்கூடை அழித்த தீயணைப்புத் துறை