இரவு நேரத்தில் கேட்ட அலறல் சத்தம். ஆடைகள் கலைந்தபடியும், தலையில் ரத்தக் காயங்களுடன் ரணக் கொடூரமாக கிடந்த மூதாட்டி. வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்த மூதாட்டியை பார்த்து அரண்டுபோய் நின்ற மக்கள். நகைக்காக நடந்த கொடூரமா? அல்லது பாலியல் இச்சைக்காக நடந்த பயங்கரமா? குற்றவாளி சிக்கினானா? நடந்தது என்ன?ஏரியாவுல நெறைய வீடுகள் இருந்தாலும், ஒரு வீட்டுக்கு பக்கத்துல இன்னொரு வீடு இல்ல. ஒரு வீட்டுக்கும் இன்னொரு வீட்டுக்கும் இடையில ரொம்பவே இடைவெளி இருக்கும். ஒரு வீட்டுல எதாச்சு அசம்பாவிதம் நடந்தா கூட அடுத்த வீட்டுக்கு கேக்காது. நைட்டு 11 மணி இருக்கும்... எல்லாரும் ஆழ்ந்து தூங்கிட்டு இருந்ததால மயான அமைதியா இருந்துருக்கு அந்த ஏரியா. அப்படி, ஒரு வீட்டுல தனியா இருந்த மூதாட்டி அய்யோ, அம்மான்னு கதறி துடிச்சிருக்காங்க. கிட்ட வீடு எதுவும் இல்லன்னாலும், நைட் நேரம்ங்குறதால, அவங்களோட அலறல் சத்தம் கொஞ்சம் தள்ளியிருக்குற வீடுகள்ல உள்ளவங்களுக்கு கேட்ருக்கு. ஆனா தெளிவா எதுவும் கேக்கல. ஏதோ வித்தியாசமா சத்தம் கேக்குதேன்னு சந்தேகப்பட்டு, அக்கம் பக்கத்துல உள்ளவங்க எட்டி பாத்துருக்காங்க. அப்ப, அந்த மூதாட்டி வீட்டுக்குள்ள ஒருத்தரு நின்னுட்டு இருக்குற மாதிரி தெரிஞ்சிருக்குது. இந்த நேரத்துல யார் இவரு, அந்த வீட்டுக்குள்ள எதுக்கு போனாங்கங்குற குழப்பத்தோட வீட்டுக்குள்ள போய் பாத்துருக்காங்க அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க. அப்ப, அந்த வீட்டு கதவுக்கு பின்னாடி மறைஞ்சு நின்னுட்டு இருந்த 65 வயசு மதிக்கத்தக்க ஒருத்தரு, மக்கள கூடுனத பாத்ததும் தப்பிச்சு போக பாத்துருக்காரு. ஒடனே பொதுமக்கள் எல்லாரும் மடக்கி பிடிச்சிருக்காங்க. அதுக்குப்பிறகு, வீட்டுல இருந்த லைட்ட போட்ட பாத்த மக்கள் ஆடிப்போய் நின்னுருக்காங்க. ஏன்னா, அந்த வீட்டுல தனியா வசிச்சிட்டு இருந்த மூதாட்டி மேரி ரத்த வெள்ளத்துல சடலமா கெடந்துருக்காங்க. அதோட மூதாட்டியோட ஆடைகள் எல்லாம் கலஞ்சு பாக்கவே கொடூரமா இருந்துருக்கு. ஒடனே, அங்க இருந்தவங்க பதற்றத்தோடயும், பயத்தோடயும் ஃபோலீஸுக்கு கால் பண்ணி இன்ஃபார்ம் பண்ணிருக்காங்க.கொஞ்ச நேரத்துலேயே ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ், மூதாட்டி மேரி சடலத்த மீட்டு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சிட்டு, பிடிபட்ட முதியவர்கிட்ட விசாரணை நடத்துனப்பதான் பல திடுக்கிடும் தகவல் வெளியே வந்துச்சு.சென்னை, நொளம்பூர்ல உள்ல சித்தார்த் நகர சேர்ந்தவர்தான் இந்த 65 வயசான முதியவர் ஏழுமலை. அதே பகுதியில உள்ள ஒரு சிறிய வீட்டுல 75 வயசான மேரி தனியா வாழ்ந்துட்டு வந்துருக்காங்க. மேரிக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்காங்க. ரெண்டு பேருமே கல்யாணமாகி வெளியூர்ல செட்டிலாகிட்டாங்க. கணவனுன் கடந்த சில வருஷத்துக்கு முன்னாடி உடல்நலக்குறைவால உயிரிழந்துட்டாரு. பசங்க ரெண்டு பேரும்தான் மாசத்துக்கு ஒருமுறை தாய் மேரிய வந்து பாத்துட்டு போவாங்களாம். இந்த சூழல, இரவு நேரத்துல அந்த மூதாட்டி மட்டும்தான் வீட்டுல தனியா இருந்துருக்காங்க. இத நோட்டமிட்ட முதியவர் ஏழுமலை, சம்பவம் நடந்த அன்னைக்கி நைட்டு 10.30 மணியளவுல மூதாட்டியோட வீட்டு கதவ தட்டியிருக்காரு. இந்த நேரத்துல யாரா இருக்கும்னு ஒருவித சந்தேகத்தோடவே கதவ தொறந்துருக்காங்க மூதாட்டி மேரி.அப்ப, வீட்டு வாசல்ல நின்னுட்டு இருந்த ஏழுமலை, மூதாட்டியோட வாய பொத்தி வீட்டுக்குள்ள இழுத்துட்டு போனவன், மூதாட்டிக்கிட்ட கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லம தன்னோட வக்கிர புத்திய காட்டி, சிதச்சு சின்னாபின்னமாக்கியிருக்கான். அப்ப, மூதாட்டி கத்தி கூச்சல் போட்டதால, அவங்க தலைய தரையில இடிச்சு கொடூரமான முறையில கொன்னுருக்கான். அந்த நேரத்துல மூதாட்டியோட சத்தம் கேட்டு அக்கம்பக்கத்துல உள்ளவங்களாம் ஓடி வந்துருக்காங்க. மக்கள் கூடுறத பாத்து பயந்து போன ஏழுமலை, பாலியல் கேஸ்ல சிக்குன அசிங்கமாகிடுமேன்னு நினைச்சு, நகைகள கொள்ளையடிக்க வந்தவன் மாதிரி நாடகமாடிருக்கான். மூதாட்டி போட்டுருந்த கவரிங் செயினலாம் அறுத்து கையில வச்சு இருந்த ஏழுமலைய பாத்து, அங்க இருந்த மக்கள் நகைக்காகதான் மூதாட்டி மேரிய ஏழுமலை கொலை செஞ்சிருக்கான் அப்டினு நினைச்சாங்க. ஆனா, அது உண்மை கிடையாது. மூதாட்டிய பாலியல் வன்கொடுமை பண்ற நோக்கத்தோடதான் இரவு நேரத்துல அவங்க வீட்டுக்குள்ள நுழைஞ்ச விஷயம் விசாரணையில தெரியவந்துச்சு. அதுக்குப்பிறகு, முதியவர் ஏழுமலை மேல கொலை வழக்குப்பதிவு செஞ்ச போலீஸ், அவர கைது பண்ணி ஜெயில்ல அடைச்சிருக்காங்க.