தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு ECR வழியாக சென்ற ஆம்னி பேருந்து உள்ளிட்ட வாகனங்களை சோழிங்கநல்லூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நிறுத்தி அதிரடி ஆய்வு செய்தார். அப்பொழுது இன்சூரன்ஸ், உரிய ஆவணம், மாசு சான்றிதழ் ஆகியவை இல்லாமலும், அதிகபாரம் மற்றும் தவறான நம்பர் பிளேட் ஆகியவற்றுடன் சென்ற வாகனங்களுக்கு 65 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது.