சென்னையில் கூவம், அடையாறு நதிகள் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களுக்குள் முழுமையாக அகற்றும்படி தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி பழமை மாறாமல் பாதுகாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு, ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என்றும், அந்த பகுதியில் வசிக்கும் குடும்பங்களின் மறுவாழ்விற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இது தொடர்பாக 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளனர்.