சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த வெள்ளாளபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்து பிரசவம் பார்த்த செவிலியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கச்சுப்ள்ளி பகுதியைச் சேர்ந்த இந்திரா என்ற பெண்ணுக்கு வெள்ளாளபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் திவ்யா மருத்துவரின் உதவி இன்றி பிரசவம் பார்த்துள்ளார். அப்போது செவிலியர் தவறுதலாக சிகிச்சை அளித்து மலம் கழிக்கும் கழிவு குழாய் பாதிக்கப்பட்டதாகக் கூறி பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.