தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நோயாளிகள், உதவியாளர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கு புதுமண தம்பதி அன்னதானம் வழங்கினர். மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளித்துவரும் சிங்காரம் தெருவை சேர்ந்த சமூக ஆர்வலர் ஹரி பிரசன்னாவுக்கு சமீபத்தில் திருமணமான நிலையில் அன்னதானம் வழங்கினார்.