சென்னை வடபழனியில் மருந்து கம்பெனி ஊழியர் மர்ம கும்பலால் கடத்தி செல்லப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திராவை சேர்ந்த தினேஷ் சென்னை வடபழனியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி அங்குள்ள தனியார் மருந்து கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்தார். அதிகாலையில் தினேஷ் சக ஊழியர் ஒருவருடன் தங்கும் விடுதிக்கு சென்று கொண்டிருந்த போது அவரை வழிமறித்த கும்பல் ஒன்று காரில் கடத்திச் சென்றது. தகவலறிந்து வந்த வடபழனி போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். கடத்தப்பட்ட தினேஷ் ஆந்திராவில் அதிக கடன் வாங்கியிருந்ததாக கூறப்படும் நிலையில் அதனால் கடத்தப்பட்டரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.