தி மைலாப்பூர் இந்து பெர்மனெண்ட் ஃபண்ட் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ், தனது முழு சொத்து விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில், 3-வது முறையாக ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தபோது, தேவநாதன் யாதவ், முதலீட்டாளர்களிடம் 680 கோடி ரூபாய்க்கு மோசடி செய்துள்ளதாகவும், அவருக்கு சென்னை அண்ணா சாலை, அண்ணாநகர், மயிலாப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவில் சொத்துக்கள் உள்ளதாகவும் முதலீட்டாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணையை ஜூலை 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்த உயர்நீதிமன்றம், அன்றைய தினம் குறைந்தபட்சம் 300 கோடிக்கு சொத்து மதிப்பை காட்டினால், தேவநாதனுக்கு ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்தது.