திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் மகனை மீட்டுத்தரக் கோரி காவல் நிலையம் முன்பு தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. மீனா என்ற அந்த பெண், தனது கணவரிடம் இருந்து மகனை மீட்டுத்தரக் கோரி காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார்.