விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சிறுவர்களுக்கான நூலகத்தை, சிறுவர்களை வைத்தே திறக்கச் செய்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மகிழ்ந்தார். மேலும், நெல்லை சாலையையும் தென்காசி சாலையையும் இணைக்கும் வகையில் ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே 38 கோடி ரூபாய் மதிப்பில் அமையவுள்ள புதிய தார்ச்சாலைக்கும் அடிக்கல் நாட்டினார்.