ஐ.நா.சபையே பாராட்டும் அளவிற்கு தமிழக மருத்துவத்துறை சிறந்து விளங்குவதாக சபாநாயகர் அப்பாவு பெருமிதம் தெரிவித்தார். நெல்லை மாவட்டம் அழகநேரி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த தாம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல்நலத்துடன் வீடு திரும்பியதாக கூறினார்.