அரிட்டாபட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் டங்க்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை மேலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எம்.பி. சு.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்பினரும், விவசாய சங்கத்தினரும் என சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.