நீலகிரி மாவட்டம் கூடலூரில் மகளிர் தினத்தை முன்னிட்டு திருமணம் ஆன பெண்களுக்கு மட்டும் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. மார்த்தோமா நகரில் தொடங்கிய போட்டி, சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசு, கேடயம் வழங்கப்பட்டது.