ராஜபாளையம் தென்காசி தேசிய நெடுஞ்சாலை செயல்பட்டு வரும் பிரபல அரஃபா கோல்ட் & டைமண்ட் நகைக்கடையின் மேலாளர் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.நகைக்கடையின் மேலாளராக பணி புரிந்து வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த அதுல் ராஜபாளையத்தில் தனியாக வீடு எடுத்து தங்கி வந்த நிலையில் நகைக்கடையின் சாவியை வாங்க வந்த ஊழியர்கள் நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் உடைத்து பார்த்த போது அதுல் மின்விசிரியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.இதையடுத்து தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.