மலேசியாவில் உயிரிழந்த கணவரின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் அழுதவாறே மனைவி மனு அளித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கோட்டைக்காடு கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவர் 9 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவுக்கு வேலைக்கு சென்ற இடத்தில் பாஸ்போர்ட்டை தொலைத்ததால் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். இந்நிலையில் அவர் மாரடைப்பால் இறந்ததாக கூறப்படுகிறது.