ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தங்கையுடனான உறவை விடாத நபரை அண்ணன் உள்ளிட்டோர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நம்புதாளை பகுதியில் ராட்டினம் வைத்து தொழில் செய்து வந்தவர் முத்துக்குமார் என்பவருக்கும் அதே பகுதியில் ராட்டினம் நடத்தி வந்த சரவணன் என்பவரின் தங்கையான கணவனை பிரிந்து வாழும் யசோதா என்பருக்கும் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதைக் கண்டித்தும் கேட்காத ஆத்திரத்தில் சரவணன் உள்ளிட்ட 6 பேர் முத்துக்குமாரை விரட்டி விரட்டி வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக இருவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.