நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள லீக்வுட் காப்பி எஸ்டேட் எல்லைப் பகுதியில் வன களப்பணியாளர்களின் வழக்கமான ரோந்து பணியின் போது ஆண் யானை இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது. யானையின் உடலை மீட்டு கூராய்வு செய்யப்பட்டதில், 48 வயது மதிக்கத்தக்க ஆண் யானை சரியாக உணவு உட்கொள்ளாமல் உடல் மெலிந்து இருந்தது தெரியவந்தது.