ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே வீட்டின் முன்பு குவித்து வைக்கப்பட்டிருந்த மக்காச்சோளத்தை யானை தின்று தீர்த்தது. கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள், விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதையாகியுள்ளது. அந்தவகையில் தாளவாடி அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தில் புகுந்த யானை, குருசாமி எனும் விவசாயி தனது வீட்டின் முன்பு குவித்து வைத்திருந்த மக்காச்சோளத்தை தின்று தீர்த்தது.